வேற்றுமை உருபு Prepositions · Case Endings

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளைக் கற்று, கோடிட்ட இடங்களை நிரப்புக. Learn how Tamil case endings attach to nouns, then solve the 8-equation fill-in-the-blank puzzle.

1. வேற்றுமை உருபு விளக்கம் · Explanation & Examples

எழுவாய் · Subject

ஒரு வாக்கியத்தில் யார்? அல்லது எது? என்ற கேள்விக்கு விடையாக வரும் பெயர்ச்சொல் எழுவாய் ஆகும். இதற்குத் தனி உருபு இல்லை. The noun that answers Who? or What? performs the action (Subject). It takes no suffix.

1. யார் சிரித்தது? குழந்தை சிரித்தது.
2. எது குதித்தது? குரங்கு குதித்தது.

செயப்படுபொருள் & வேற்றுமை உருபு · Object & Case Endings

எதை? யாரை? எங்கே? எதனால்? யாருக்கு? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கப் பெயர்ச்சொல்லுடன் இணையும் அசைகள் வேற்றுமை உருபுகள் எனப்படும். Suffixes like ஐ, ஆல், ஓடு, உடன், கு, இன், இல், இடம், உடைய attach to the base noun (நிலைமொழி) to show its role in the sentence.

அம்மா + ஐ = அம்மாவை  ·  பள்ளி + கு = பள்ளிக்கு

# வேற்றுமைCase உருபுCase Ending பொருள் & வினாMeaning & Question எடுத்துக்காட்டுExample
1 முதல் வேற்றுமை1st case (உருபு இல்லை)Subject (எழுவாய்) யார்? எது?Answer to who & what 1. யார் சிரித்தது? குழந்தை சிரித்தது.
2. எது குதித்தது? குரங்கு குதித்தது.
1. Who laughed? The baby laughed.
2. What jumped? The monkey jumped.
2 இரண்டாம் வேற்றுமை2nd case ஐDirect Object (செயப்படுபொருள்) எதை, யாரை, எவற்றைwhat, whom, which things அம்மா + ஐ = அம்மாவைmother + ஐ = அம்மாவை (mother, obj.)
3 மூன்றாம் வேற்றுமை3rd case ஆல்by / with (instrument or doer) எதனால், யாரால்with what, by whom அம்மா + ஆல் = அம்மாவால்by mother
4 மூன்றாம் வேற்றுமை3rd case ஓடுwith யாரோடு, எதனோடுwith whom, with what அம்மா + ஓடு = அம்மாவோடுwith mother
5 மூன்றாம் வேற்றுமை3rd case உடன்along with யாருடன், எதனுடன்along with whom / what அம்மா + உடன் = அம்மாவுடன்along with mother
6 நான்காம் வேற்றுமை4th case குto / for யாருக்கு, எங்கேto whom, where to பள்ளி + கு = பள்ளிக்குto school
7 ஆறாம் வேற்றுமைப் பொருள் *6th case meaning * இன்of யாருடைய, எதனுடையwhose, of what அம்மா + இன் = அம்மாவின்of mother
8 ஐந்தாம் வேற்றுமை5th case இருந்து (+ இடம் + இருந்து)from (a person / living being) யாரிடமிருந்துfrom whom அம்மா + இடம் + இருந்து = அம்மாவிடமிருந்துfrom mother
9 ஐந்தாம் வேற்றுமை5th case இலிருந்துfrom (a place / thing) எங்கிருந்துfrom where பள்ளி + இலிருந்து = பள்ளியிலிருந்துfrom school
10 ஏழாம் வேற்றுமை7th case இல்in / at எங்கேwhere / in what பள்ளி + இல் = பள்ளியில்in school
11 ஏழாம் வேற்றுமை7th case இடம்with / to (a person / living being) யாரிடம், எதனிடம்with/to whom அம்மா + இடம் = அம்மாவிடம்with / to mother
12 ஆறாம் வேற்றுமை6th case அது's / of யாருடைய, யாரது, எதனுடையwhose மாணவன் + அது = மாணவனதுstudent's
13 ஆறாம் வேற்றுமை6th case உடைய's / belonging to யாருடைய, யாரது, எதனுடையwhose அம்மா + உடைய = அம்மாவுடையmother's
14 எட்டாம் வேற்றுமை (விளி)8th case (vocative) ஏAddressing / calling (விளி) அழைத்தல்calling out மாணவன் + ஏ = மாணவனே!O student!
15 எட்டாம் வேற்றுமை (விளி) *8th case (vocative) * ஆAddressing / question emphasis அழைத்தல் / வினாcalling / question மன்னன் + ஆ = மன்னா!
மாணவன் + ஐ + ஆ = மாணவனையா!
O king! / Is it the student (obj.)?!

* இன் — ஐந்தாம் வேற்றுமை உருபு; "அம்மாவின்" போன்ற சொற்களில் உடைமைப் பொருளில் (ஆறாம் வேற்றுமைப் பொருள்) வருகிறது.* இன் is formally a 5th-case ending; in words like அம்மாவின் (mother's) it carries the 6th-case meaning of possession.

* மன்னா! — எட்டாம் வேற்றுமை (விளி). மாணவனையா! — இரண்டாம் வேற்றுமை (ஐ) + வினா (ஆ).* மன்னா! is the 8th case (vocative). மாணவனையா! is the 2nd case (ஐ) plus the question ஆ.

2. கோடிட்ட இடங்களை நிரப்புக · Fill-in-the-Blank Puzzles

10 சொல் வில்லைகளில் ஒன்றைத் தொட்டு, கீழுள்ள 8 சமன்பாடுகளில் பொருத்தமான காலி இடத்தை ( ___ ) நிரப்புக. Choose from the 10 word chips to fill the 8 blanks (2 extra chips are distractors).

Play : சொல்லாடல் · Solladal